அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்: பேனர்கள் கிழிப்பு, மோதல்! ரசிகர்கள் வெறியாட்டம்
![அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்: பேனர்கள் கிழிப்பு, மோதல்! ரசிகர்கள் வெறியாட்டம் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்: பேனர்கள் கிழிப்பு, மோதல்! ரசிகர்கள் வெறியாட்டம்](https://www.nativenews.in/h-upload/2023/01/11/1641684-rohini.webp)
தமிழகம் முழுவதும் 8 வருடங்களுக்கு பிறகு தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டதால் நேற்று இரவு முதலே தியேட்டர் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்க்களப்பட்டது. அஜீத், விஜய் என இருதரப்பு ரசிகர்களுக்கு இடையேயான மோதலை தவிர்ப்பதற்காகவே 2 படங்களுக்கும் முதல் காட்சி வெவ்வேறு நேரத்தில் திரையிடப்பட்டது. தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டும் இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டு போஸ்டர், பேனர்களை கிழித்தெறிந்தனர். சென்னையில் புகழ்பெற்ற ரோகினி தியேட்டரில் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே திரையிடப்பட்டன.
அதிகாலை 1 மணிக்கு துணிவு படம் திரையிடப்பட்டபோது தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் அங்கிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்களை கிழித்து எறிந்தனர். அதேபோல் 4 மணிக்கு வாரிசு படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் பதிலுக்கு அஜித் பேனரை கிழித்து எரிந்தனர். இருதரப்பு ரசிகர்களுக்கும் மோதல் வெடித்து அடிதடியில் இறங்கினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக காட்சி அளித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி இருதரப்பு ரசிகர்களையும் விரட்டி அடித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu