இன்ஸ்டாகிராமில் கணவருடனான புகைப்படங்களை நீக்கிய அசின்: விவாகரத்தா?

இன்ஸ்டாகிராமில் கணவருடனான புகைப்படங்களை நீக்கிய அசின்:  விவாகரத்தா?
X

கணவருடன் நடிகை அசின்

அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் ராகுல் ஷர்மாவுடன் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விவாகரத்து வதந்திகளை கிளப்பியுள்ளது.

கணவர் ராகுல் ஷர்மாவுடன் விவாகரத்து வதந்திகள் வெளிவந்ததை அடுத்து அசின் இப்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளார். நடிகை அசின் கணவர் ராகுலுடனான தனது அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார், இது இப்போது வதந்திகளுக்கு தீனி போட்டுள்ளது. அனைத்து புகைப்படங்களையும் நீக்கியதற்கான காரணத்தை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நடிகையும் ராகுல் ஷர்மாவும் விவாகரத்துக்கு செல்கிறார்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

மறைந்த ரிஷி கபூருடன் அசின் மற்றும் ராகுலின் ஒரே ஒரு படம் மட்டுமே இப்போது அவரது வலைப்பக்கத்தில் உள்ளது. தற்போது, ​​அசினின் இன்ஸ்டாகிராம் பக்கம் அவரது மகள் ஆரின் புகைப்படங்களால் நிறைந்துள்ளது. இந்த வதந்திகளுக்கு அசின் இன்னும் பதிலளிக்கவில்லை.


துடுக்கான நடிப்பினால் அறிமுகமான வேகத்தில் இளசுகளை அசின் கட்டிப்போட்டார். மலையாளத்தில் அறிமுகமானவர். தமிழில் ஜெயம் ரவியின் ஜோடியாக ’எம்.குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி’யில் பீடி வலித்தபடி மலையாளத் தமிழ் கொஞ்சிய அசின், அடுத்த வருடமே சூர்யா ஜோடியாக ’கஜினி’ மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். ’வரலாறு’, ’போக்கிரி’ என அடுத்தடுத்த படங்களில் அஜித் - விஜய் ஜோடியாக உடன் உச்சம் தொட்டவர், தசாவதராம் மூலமாக கமல் ஹாசனுடனும் ஜோடி போட்டார். ஆமிர்கான் ஜோடியாக இந்தி ’கஜினி’ வாயிலாக பாலிவுட்டில் கால்வைத்தவர், சல்மான்கான், அஜய் தேவ்கன் என பல முன்னணி நாயகர்களுடன் டூயட் பாடினார்.

திடீரென ’மைக்ரோமேக்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்துகொண்டு, ரசிகர்களுக்கு டாடா காட்டினார். அடுத்த வருடமே இல்வாழ்க்கையின் மகிழ்வை மகள் ஆரின் உடன் கொண்டாடினார். அப்போது முதல் தனது கணவர், மகள் என குடும்பத்தினருடனான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

தற்போது, அசினின் நடவடிக்கை, அவரது மண வாழ்க்கை தொடர்பான ஐயங்களை விதைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியுள்ளார் அசின். மேலும், கணவர், குழந்தை, திரைத்துறை மலரும் நினைவுகள் என அசின் தொடர்பான எதுவும் பதிவேறக் காணோம். போதாக்குறையாக பழைய பதிவுகளில் பலவற்றை அசின் அழிக்க ஆரம்பித்த பிறகே விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

தொழிலதிபரான ராகுல் சர்மா, திருமணத்துக்கு அப்பால் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது குறித்து அசினுக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அசின் பலமுறை எச்சரித்த பிறகும், ராகுல் சர்மா வழிக்கு வரவில்லை. குடும்ப விவகாரம் பெரிதாக வெடித்ததில், கணவரைப் பிரிந்து மகளுடன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் அசின்.

கணவருடனான பிணக்கு குறித்து குடும்பப் பெரியவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதெல்லாம் இல்லை அசின் விவாகரத்து முடிவில் தீர்மானமாக இருக்கிறார் என்றும் பலவாறான செய்திகள் வெளியாகி வருகின்றன. அசின் தரப்பிலான அதிகாரபூர்வ தகவலால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Tags

Next Story