ஏ. ஆர். ரஹ்மான் மருமகன் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று

ஏ. ஆர். ரஹ்மான் மருமகன் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று
X

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் 

தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் - ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன் ஆவார். இவரின் தாய் ரெய்கானா ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார்.

ஏ. ஆர். ரஹ்மான் மருமகன் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று

ஜி. வி. பிரகாஷ் குமார் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் - ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன் ஆவார். இவரின் தாய் ரெய்கானா அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார். இசை குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டு இசை பயின்று வந்துள்ளார்.

இவர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து பொல்லாதவன், காளை, குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரையுலகில் அனைவராலும் பாராட்டப்பட்டு பிரபலமானவை ஆகும்.

தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார். ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

பல பாடல்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடி திரையுலகில் அணைத்து தரப்பிலும் அறியப்பட்டார்.

இத்திரைப்படத்தின் பிரபலம் கொண்டே இவர் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவர் 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!