சினிமா கதைக்களத்தை எங்கிருந்து எடுக்கிறார் ஆர்.செல்வராஜ் தெரியுமா..?
பாரதிராஜா- சிவாஜி- அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்.
முதல் மரியாதை, சின்னக்கவுண்டர், அலைபாயுதே என தலைமுறைகளைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருப்பவர், ஆர். செல்வராஜ். இப்போதும் மணிரத்னத்தின் ஒரு படத்திற்கு எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது வாசிப்பும், உழைப்பும், அர்ப்பணிப்பும் இணையில்லாதது. இடைவிடாத வாசிப்பால் காலத்தோடு ஓடிக்கொண்டே இருப்பவர்.
அன்றாட நிகழ்வுகளையும், அரசியலையும் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். இப்போதும் இன்றைய ரசனை மாற்றத்திற்கேற்றவாறு கதைகளை அவர் எழுதிக்கொண்டு தானிருப்பார். அவரது உழைப்பும், அறிவும் ஓய்வறியாதது. வாழ்க்கையிலிருந்து கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது இவரது தனித்திறமை. செய்தித்தாள்களில் வாசிப்பவற்றை நாம் வெறும் செய்திகளாகக் கடந்து போயிருப்போம்.. ஆனால் அவற்றில் மறைந்திருக்கும் கதைகளை அடையாளம் கண்டு அதனை தொகுத்து வைத்திருப்பார்.
ஒரு திரை எழுத்தாளராக அவரது ஆளுமையையும், கம்பீரத்தையும், காட்சியமைப்புகளைத் தொகுக்கும் நுணுக்கத்தையும் பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, பொண்ணு ஊருக்குப் புதுசு உள்ளிட்ட வணிகப்படங்களையும், உப்பு உள்ளிட்ட கலைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
திரைக்கதை என்றால் பாக்யராஜ் என்ற தனி அடையாளம் இருப்பதுபோல அந்த காலகட்டத்தில் வசனம் எழுதுவது ஆர்.செல்வராஜ்க்கு தனி அடையாளம் இருந்தது. சூழலுக்கு ஏற்ப வசனம் எழுதுவது அப்படி ஒன்றும் எளிதானதல்ல. கதைக்களம், பேசப்படும் பாத்திரம், கதையின் சூழல் போன்றவை முழுமையாக உணரப்பட்டிருந்தால் மட்டுமே வசனம் கொட்டும். அந்த வகையில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்க்கு தனி இடம் உண்டு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu