நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து
![நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து](https://www.nativenews.in/h-upload/2023/03/06/1673849-big-b.webp)
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்; நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அறியப்பட்ட பிரபலம்; பிக் பி என தனது உருவத்தை மட்டுமல்ல, வளர்ச்சியையும் அண்ணாந்து பார்க்க வைத்த அந்த ஒற்றை பெயருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் பட்டாளம்.. ஆம், அது அமிதாப் பச்சனே தான். திரையுலகில் ஏராளமான ஏற்றங்களையும் இறக்கங்களையும் கடந்து, 80 வயதில் இன்றைக்கும் தனது கலைப்பயணத்தை உயிர்ப்புடன் தொடர்கிறார் அமிதாப் பச்சன். 80 வயதான இந்த கலைஞன் 20 வயது இளைஞனின் மனதுடன் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கடின உழைப்பால் திரையுலகின் உச்சம் தொட்ட நடிகர் அமிதாப்
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் புராஜெக்ட் கே. ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஐதராபத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டடது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . வலது விலா எலும்பு முறிவு மற்றும் தசை நார் கிழிந்தது ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது.
பின்னர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வீடு திரும்பி விட்டதாக அவர் ட்விட் செய்துள்ளார். அமிதாப் பச்சன் காயமடைந்ததையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது
தற்போது வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த விவரங்களை அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.
அவருக்கு மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன் ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டு உள்ளார்.
ப்ராஜெக்ட் கே உடன்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் இது அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu