பத்து கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: சபாஷ்

பத்து கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: சபாஷ்
X
எத்தனை கோடி கொடுத்தாலும் குட்கா மற்றும் மது தொடர்பான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்திருக்கிறார் அல்லு அர்ஜுன்

பாலிவுட் நடிகர்களான அமிதாப், அஜய் தேவ்கன், ஷாருக் கான், அக்‌ஷய் குமார் போன்ற நடிகர்கள் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடித்தது பெரும் எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

அமிதாப், அக்‌ஷய் குமார் ஆகியோர், இனிமேல் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தனர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக மாறியுள்ளார். அவரது மார்க்கெட்டும் எகிறியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் பிரபல நட்சத்திரங்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க, பெருநிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கம்.

குட்கா நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனை அணுகியுள்ளது. ஆனால் குட்கா, பான் மசாலா மற்றும் மதுவகை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று அல்லு அர்ஜுன் மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது ஒரு விளம்பரத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் 7 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 10 கோடி ரூபாய் தருவதாக கூறிய குட்கா நிறுவன விளம்பரத்தில் 'எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்' என நடிக்க மறுத்துள்ளார்.

Tags

Next Story
challenges in ai agriculture