குட் பேட் அக்லி... இதுதான் AK 63 டைட்டில்...!
அஜித்குமாரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதும், அந்த படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகியுள்ளது.
இன்னைக்கு வர இருப்பது விடாமுயற்சி அப்டே்டா அல்லது அஜித்குமாரின் அடுத்த பட அப்டேட்டா என ரசிகர்கள் உற்சாகத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தனர். இதனிடையே 6.31 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்பதை சிம்பாளிக்காக குறிப்பிட்டிருந்தார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. இதனிடையே அப்டேட் வெளியானதில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
2 இல்ல 3... ஆதிக் படத்துல 3 அஜித்..! வேற லெவல் ஸ்டோரி இது..!
அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் ட்வீட் ஒன்று ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'AK63' படத்தின் அப்டேட்டை நோக்கியா அல்லது 'விடாமுயற்சி'யின் அடுத்தகட்ட அறிவிப்பை நோக்கியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக வேறு படத்தில் அஜித் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
'AK63' போஸ்டர் வடிவமைத்தது யார்?
'AK63' திரைப்படத்தின் போஸ்டரை வடிவமைக்கும் பொறுப்பு டியூனி ஜான் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'பேட்ட', 'புஷ்பா', 'கேப்டன் மில்லர்' போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்த அனுபவம் இவருக்கு உள்ளது. அஜித் குமாரின் படத்திற்கு அவர் எப்படிப்பட்ட கலைநயம் ஊட்டுகிறார் என்பதை ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
'AK63' திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பதும் தற்போது அரசல் புரசலாக வெளிவந்த தகவலாக இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து காண்போம்.
'விடாமுயற்சி' என்னாச்சு?
'விடாமுயற்சி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'வேட்டையன்' (ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்) படப்பிடிப்புக்குப் பிறகு தான் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் குமார் ரசிகர்களுக்கு தற்போதைக்கு அவரின் அடுத்த திரைப்படமான 'AK63' மீது தான் கவனம் செல்லும்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த படப்பிடிப்பு அவ்வப்போது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்படுவதாக இருந்தது. அப்படி இம்முறை பணப்புழக்கம் காரணமாக லைகா இந்த படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது.
பொதுவாக திரைப்பிரபலங்களின் மேலாளர்கள், வழக்கமான தகவல் பரிமாற்றத்திற்கே ட்விட்டரை பெரிதும் பயன்படுத்துவர். சுரேஷ் சந்திராவின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதை பலரது பதில் ட்வீட்கள் மூலம் அறியமுடிகிறது. அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பொங்கல் ரிலீஸ்?ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாக துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே வீரம் படத்தில் அஜித்துடன் பணிபுரிந்துள்ளார். அதேமாதிரியான ஆல்பம் ஹிட் பாடல்களை தருவார் என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.
#GoodBadUgly அதிகாரப்பூர்வ நடிகர்கள் & குழுவினர் ..🔥
நடிப்பு: அஜித் குமார்
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: ஆதிக் ரவிச்சந்திரன்
DOP: அபிநந்தன் ராமானுஜம்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி
சண்டைக்காட்சிகள்: சுப்ரீம் சுந்தர், கலோயன் வோடெனிச்சரோவ்
ஒப்பனையாளர்: அனு வர்தன்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா
பிஆர்ஓ (தெலுங்கு) : வம்சி சேகர்
சந்தைப்படுத்தல்: முதல் காட்சி
சந்தைப்படுத்தல் (தமிழ்) : டி'ஒன்
ஒலி வடிவமைப்பு: சுரேன்
விளம்பர வடிவமைப்புகள்: ADFX அம்பானி
தலைமை நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்
CEO: செர்ரி
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி-ஒய் ரவி சங்கர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu