2 இல்ல 3... ஆதிக் படத்துல 3 அஜித்..! வேற லெவல் ஸ்டோரி இது..!

2 இல்ல 3... ஆதிக் படத்துல 3 அஜித்..! வேற லெவல் ஸ்டோரி இது..!
X
நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். அதிலும் வரலாறு படத்துக்கு பிறகு மீண்டும் 3 வேடங்களில் தோன்ற இருக்கிறார் என்கிறார்கள்

அஜித்குமாரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதும், அந்த படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுபோக கூடுதலாக இந்த படத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. சில பிரச்னைகள் காரணமாக இந்த படம் கிடப்பில் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அஜித்குமார் அடுத்த படத்துக்கு செல்கிறார்.

AK63 அந்த இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் அஜித்..!

அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் ட்வீட் ஒன்று ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'AK63' படத்தின் அப்டேட்டை நோக்கியா அல்லது 'விடாமுயற்சி'யின் அடுத்தகட்ட அறிவிப்பை நோக்கியா என ரசிகர்கள் குழம்பி வந்தனர். சரியாக 6.30 மணிக்கு இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

குட் பேட் அக்லி

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களை இயக்கி பரபரப்பை கிளப்பிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அது உறுதியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


அஜித் 1, 2 ,3

நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். அதிலும் வரலாறு படத்துக்கு பிறகு மீண்டும் 3 வேடங்களில் தோன்ற இருக்கிறார் என்கிறார்கள். இது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தின் ஒன் லைன் ஸ்டோரிதான் எனவும் பேச்சு அடிபடுகிறது. அதற்காகவே இந்த படத்தின் கதையை மீண்டும் திருத்தி எழுதியிருக்கிறாராம் ஆதிக்.

கிட்டத்தட்ட அதே லைன்தான் என்றாலும் படம் அப்படியே இருக்கப்போவதில்லை என்கிறார்கள். காரணம் இந்த படத்தின் ஒன் லைன் சிறப்பாக இருந்தாலும், படம் அதே கதையைப் போல இருந்தால் அதுவே நெகடிவ்வாக அமைந்துவிடும் என்பதால், முற்றிலும் இளமைப் புதுமையான அஜித் கதாபாத்திரத்தை கதைக்குள் இணைத்துள்ளாராம் ஆதிக். இந்த படத்துக்காகத்தான் அஜித்குமார் உடலைக் குறைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

'AK63' போஸ்டர் வடிவமைத்தது யார்?

'AK63' திரைப்படத்தின் போஸ்டரை வடிவமைக்கும் பொறுப்பு டியூனி ஜான் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'பேட்ட', 'புஷ்பா', 'கேப்டன் மில்லர்' போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்த அனுபவம் இவருக்கு உள்ளது. அஜித் குமாரின் படத்திற்கு அவர் எப்படிப்பட்ட கலைநயம் ஊட்டுகிறார் என்பதை ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

'AK63' திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பதும் தற்போது அரசல் புரசலாக வெளிவந்த தகவலாக இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து காண்போம்.


'விடாமுயற்சி' என்னாச்சு?

'விடாமுயற்சி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'வேட்டையன்' (ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்) படப்பிடிப்புக்குப் பிறகு தான் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் குமார் ரசிகர்களுக்கு தற்போதைக்கு அவரின் அடுத்த திரைப்படமான 'AK63' மீது தான் கவனம் செல்லும்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த படப்பிடிப்பு அவ்வப்போது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்படுவதாக இருந்தது. அப்படி இம்முறை பணப்புழக்கம் காரணமாக லைகா இந்த படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது.

பொதுவாக திரைப்பிரபலங்களின் மேலாளர்கள், வழக்கமான தகவல் பரிமாற்றத்திற்கே ட்விட்டரை பெரிதும் பயன்படுத்துவர். சுரேஷ் சந்திராவின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதை பலரது பதில் ட்வீட்கள் மூலம் அறியமுடிகிறது. அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!