ஏகே 61: இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்கு தயாரான அஜித்

ஏகே 61:  இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்கு தயாரான அஜித்
X
ஏகே 61 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் - அஜித் - போனி கபூர் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம்சிட்டியில் ஒரு மாதத்திற்குள் மேலாக நடத்தப்பட்டது.

புனேயில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஜுன் மாதம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், த்அஜித் ஃபாரின் டூர் புறப்பட்டு சென்றார். இந்த இடைவெளியில் அஜித் தவிர மற்ற நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை டைரக்டர் வினோத் எடுத்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.


அஜித், இந்தியா திரும்பியதும் ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என்று பார்த்தால் அவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி, போட்டி என சென்று விட்டார்.

ஹெச்.வினோத்தும் வடசென்னையில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போட்டோக்கள் வெளியானது. ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னையில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. அதில் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

செப்டம்பர் மாதத்திற்குள் ஷுட்டிங்கை முடித்து, ஏகே 61 படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது முதல் இதுவரை ஒரு அப்டேட்டை கூட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. கடைசியாக ஷுட்டிங் துவங்குவதற்கு முன் அஜித்தின் பிளாக் அன்ட் ஒயிட் நெகடிவ் இமேஜ் ஒன்றை மட்டும் ட்விட்டரில் பகிர்ந்தார். இதனால் படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல் பரவியது.

இதற்கிடையில் மற்றொரு தகவலாக ஏகே 61 படத்திற்கு 'வல்லமை' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


தற்போது ஏகே 61 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் இன்று துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அஜித், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றுள்ளார்.

அஜித், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் ட்விட்டரில் தீயாய் பரவி வருகிறது.

Tags

Next Story