துணிவு - வாரிசு மூன்றாவது நாள் வசூல்: எது டாப்?
![துணிவு - வாரிசு மூன்றாவது நாள் வசூல்: எது டாப்? துணிவு - வாரிசு மூன்றாவது நாள் வசூல்: எது டாப்?](https://www.nativenews.in/h-upload/2023/01/14/1643494-thunivu-3rd-day.webp)
துணிவு - வாரிசு மூன்றாவது நாள் வசூல்
இந்த பொங்கல் விஜய், அஜித் ரசிகர்கள் செம விருந்தாக அமைந்தது. வாரிசு - துணிவு என இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்து திரையரங்கங்கள் திருவிழா கோலத்திற்கு மாறியது.
அஜீத் குமாரின் துணிவு திரைப்படத்தின் அனைத்து மொழி பாக்ஸ் ஆபிஸ் வசூல் 3ஆம் நாள் இந்திய அளவில் தோராயமாக 8.50 கோடிகள் என்று ஆரம்ப கணிப்பு இருந்தகத்து. வெள்ளிக்கிழமை என்பதால், இது முதல் இரண்டு நாள் வசூலை விட குறைவு. ஆனால் பொங்கல் வார இறுதியை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு நாள் வசூல் பல ரிபீட் ஆடியன்ஸுடன் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இப்படம் 100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு தனது முதல் 2 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அளவில் 36.20 கோடி வசூல் செய்துள்ளது. துணிவு படத்தின் 3வது நாள் வசூல் அனைத்து மொழிகளிலும் (ஆரம்ப மதிப்பீடுகள்) மூன்றாவது நாளில் சுமார் ரூ. 8.50 கோடி வசூலை பெற்றுள்ளது.
முதல் நாள் நாள் வசூல் ரூ. 24.4 கோடி
இரண்டாம் நாள் வசூல் ரூ. 11.8 கோடி
மூன்றாம் நாள் ரூ. 8.50 கோடி (ஆரம்ப மதிப்பீடு)
மொத்தம் வசூல் ரூ. 44.70 கோடி.
ஆட்ட நாயகன் அஜித்குமார் தனது அசாதாரண நடிப்பால் அனைவரையும் திகைக்க வைத்தார். அவரது குரல் மாடுலேஷன் ஸ்கிரிப்ட்டிற்கு கச்சிதமாக பொருந்துகிறது. எச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் குமாரின் சிறந்த பகுதியை வெளியே கொண்டு வதுள்ளார்.
வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படம் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வட அமெரிக்காவில், அஜித்தின் 'துணிவு' திரைப்படம் அதிக வசூலை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரிசு சற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
அதே போல் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 40 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் மூன்று நாட்கள் முடிவிலும் அதிக வசூல் செய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார் அஜித்.
இரண்டு படங்களுமே, ஒரு சில கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இனி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் இரண்டு படங்களுமே நல்ல வசூல் கிடைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu