கோர்ட்டு, கேஸ்னு அலையும் நடிகை ஐஸ்வர்யாராய்

கோர்ட்டு, கேஸ்னு அலையும் நடிகை ஐஸ்வர்யாராய்
X

மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய்.

மகள் தொடர்ந்த வழக்கு காரணமாக நடிகை ஐஸ்வர்யாராய் கோர்ட்டிற்கு அலைந்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படைப்பில் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராய். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன் தம்பதிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தை உள்ளது. அவருக்கு தற்போது 11 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நலம் குறித்து சிலர் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தனர். இதைப்பார்த்து ஷாக் ஆன ஆராத்யா, அதிரடி ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார்.

அவர் தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஆராத்யாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆராத்யா குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மகளின் இந்த சட்ட போராட்டத்துக்காக அலைந்ததன் காரணமாக தான் நடிகை ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது அது வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளதால் இன்னும் சில தினங்களில் மும்பையில் நடக்கும் பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!