சிகிச்சைக்குப் பிறகு சீரானது உடல்நிலை… வீடு திரும்பவிருக்கும் பாரதிராஜா..!

சிகிச்சைக்குப் பிறகு சீரானது உடல்நிலை… வீடு திரும்பவிருக்கும் பாரதிராஜா..!
X

இயக்குனர் பாரதிராஜா.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜா உடல் நலம் தேறி வரும்நிலையில், விரைவில் வீடு திரும்பவிருக்கிறார்.

மண்மணம் மாறாத கிராமத்து மனிதர்களை... இயற்கை எழிலார்ந்த பச்சைப்பசுமை போர்த்திய வயல்வெளிகளை... விளிம்பு நிலை மனிதர்களை... விவசாயப் பெருங்குடி மக்களை... எளிய முகங்களை வெள்ளித்திரையில் வெளிச்சமிட்டுக் காட்டிய முதல் கலைஞனான இயக்குநர் பாரதிராஜா, அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கே சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தற்போது பாரதிராஜா உடல் நலம் தேறியிருக்கிறார். முன்னதாக, தி.நகர் மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த பாரதிராஜாவை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் வந்து நலம் விசாரித்தார்.

இந்தநிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், "பூரண நலம்பெற்று உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க வருவேன்" என்று தெரிவித்திருந்தார்.

தற்போது இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவித்திருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் விரைவில் நலம் பெறுவார் என்றும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!