14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புதிய படத்தில் ரஜினியுடன் வடிவேலு

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புதிய படத்தில் ரஜினியுடன் வடிவேலு
X

ரஜினிகாந்த் - வடிவேலு

Actor Rajinikanth -பதினான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Actor Rajinikanth -சமீபகாலமாக ரஜினி நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. எனவே இனிமேல் தான் நடிக்கும் படங்கள் பெரியளவில் ஹிட் ஆக வேண்டும் என ரஜினி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கேற்ற வகையில் கதை தேர்வு மட்டுமின்றி, நடிகர்களையும் தேர்வு செய்யும் பணியில் ரஜினி ஈடுபட்டுள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' என்று அழைக்கப்படும் புதிய படத்தை 'டான்' புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தலைவர் - 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் அரவிந்த் சாமி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் அடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலமாக மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளார். இந்தப்படத்தின் மோசமான ரிசல்ட்டுக்காக விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிவடைந்துள்ளது. தீபாவளி பிரேக்கிற்குப் பிறகு மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி நவம்பர் இறுதியில் முடிவடையும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படமான தலைவர் 170 படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு லைகா நிறுவனம் ரஜினிகாந்த் உடனான கூட்டணியை உறுதிப்படுத்தியது. தற்காலிகமாக 'தலைவர் 170' என்று அழைக்கப்படும் அந்த படத்தை 'டான்' புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் நடிகர்கள் அரவிந்த் சாமி மற்றும் வடிவேலு ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிற நடிகர் நடிகைகளின் தேர்வு பணிகளும் நடந்து வருகின்றன.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான தளபதி என்ற படத்தில் ரஜினியின் தம்பியாக அரவிந்த்சாமி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்னொரு பக்கம் ரஜினியும் வடிவேலுவும் 14 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. வடிவேலுவும், அரவிந்த்சாமியும் ரஜினியுடன் இணைவதால் அதற்கேற்ற வகையில் தெளிவான திரைக்கதை தயாராகி உள்ளது. மீண்டும் சந்திரமுகி போல் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி