த்ரிஷாவிடம் பேச்சை நிறுத்திய நபர் யார்?

த்ரிஷாவிடம் பேச்சை நிறுத்திய நபர் யார்?
X

பைல் படம்.

Actress trisha latest news-தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைத்து பேசப்பட்ட த்ரிஷா, திருமண தேதியை அவர் எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Actress trisha latest news-தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என கிட்டதட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் த்ரிஷா. படங்களில் நடிப்பதுடன் சமூக நலனுக்காக செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு விளம்பர தூதராகவும் த்ரிஷா செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் த்ரிஷாவை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

கடைசியாக பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது ராம் முதல் பாகம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், தி ரோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது நல்ல விஷயம். அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதைப் போன்றதாகும் என்று கூறியுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷா குறிப்பிடம் நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். த்ரிஷாவிடம் பேச்சை நிறுத்திய நபர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actress trisha latest news-த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியன் என்பவருக்கும் கடந்த 2015-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றதுடன் நிச்சயதார்த்தமும் முறித்துக் கொள்ளப்பட்டது. இதன்பின்னர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைத்து த்ரிஷா பேசப்பட்டார்.

தற்போது திருமண தேதியை அவர் எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு காணப்படுவதால் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்திருக்கிறார் த்ரிஷா.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!