நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
X
மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய மொழிகளில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக நடிகை சமந்தா உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கினார்.

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை திணற வைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

நடிகை சமந்தா, இப்போது விஜய தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க இருக்கிறார்.

அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்சினை ஏற்பட்டது. சமீபத்தில் இவர் மையோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பின்னர் யஷோதா திரைப்பட ப்ரோமஷனுக்கு வந்திருந்த அவர் பேட்டி அளித்திருந்தார். அவர் உடல் நிலை தேறிவிட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது இருப்பினும் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நடிகை சமந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!