'நான் நடுநிலையானவள்' : நடிகை சாய்பல்லவி வீடியோவில் விளக்கம்

நான் நடுநிலையானவள் : நடிகை சாய்பல்லவி வீடியோவில் விளக்கம்
X

நடிகை சாய்பல்லவி 

actress saipallavi -நடிகை சாய்பல்லவி சமீபத்தில் நேர் காணலில் கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

actress saipallavi-சமீபத்தில் நடிகை சாய்பல்லவி அளித்த நேர்காணலில் காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் சொல்லும் கருத்துக்கள் மற்றும் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறுவது மற்றும் முஸ்லீம் ஒருவர் தாக்கப்பட்டது குறித்த அவரது கருத்துக்கு பரவலான கருத்துக்கள் பகிரப்பட்டன. எதிர்ப்பு,ஆதரவு என்று இரு தரப்பு கருத்துக்கள் குவிந்தன. அதில் சாய் பல்லவி வலது சாரியா? இடது சாரியா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

actress saipallavi-அந்த கேள்விகளுக்கு நடிகை சாய் பல்லவி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் 'நான் முதன்முதலாக இப்படி ஒரு விளக்கத்தை முன்வைக்கிறேன். நான் வலது சாரியும் அல்ல. இடது சாரியும் அல்ல. நான் நடுநிலையானவர். எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் தவறுதான். அது எந்த மதத்தில் நடந்தாலும் தவறுதான் என்பதை வலியுறுத்தவே நான் கூறினேன். எனக்கு குரல் கொடுத்து ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. எல்லோரும் அன்பையும் அமைதியையும் அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/Sai_Pallavi92/status/1538170542620286978?s=20

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!