நடிகை சாய்பல்லவி திடீர் டிரெண்டிங் ஆன காரணம் என்னாங்க..?

நடிகை சாய்பல்லவி திடீர் டிரெண்டிங் ஆன காரணம் என்னாங்க..?
X

சாய் பல்லவி


ஒரு பெரிய நிறுவனத்தின் விளம்பரத்தை வேண்டாம் என மறுத்ததின் மூலமாக அவரது உள்ளார்ந்த உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன.

சாய் பல்லவியை எல்லோருக்கும் தெரியும். நடிகர் தனுஷ் நடித்த மாரி2-ல் அவருக்கு ஜோடி சாய் பல்லவி. அந்த படத்தில் டான்சில் பின்னி எடுத்தவர். பெரும்பாலான பாலிவுட் நடிகர், நடிகைகள் செய்யாத ஒரு காரியத்தை சாய் பல்லவி செய்தார். அதனால் பெரிதும் பேசப்பட்டார்.


சாய் பல்லவி நல்ல நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு டாக்டர். ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் முடித்தவர். அவர் ஒரு நடனக் கலைஞரும் ஆவார். அவர் தமிழ், தெலுங்கு,மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

நிராகரிப்பில் புகழ் :

ஒரு ஃபேர்னஸ் க்ரீம் பிராண்டுடனான ரூ. 2 கோடிக்கான விளம்பர ஒப்பந்தத்தை சாய் பல்லவி நிராகரித்தார். அதனால் அவர் இப்போது வரை டிரெண்டிங்கில் இருக்கிறார். மேலும் ஒரு நேர்காணலில் இது "இந்திய நிறம்" அதை எந்த கிரீம் போட்டும் மாற்றிவிட முடியாது. அதனால்தான் நான் அந்த விளம்பரத்தை வேண்டாம் என்றேன் என்று தனது முடிவு குறித்து விளக்கம் அளித்தார்.


2015ம் ஆண்டு பிரேமம் திரைப்படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவி பெரிதும் பேசப்பட்டார். விருதுகளும் வாங்கியுள்ளார். ஒரு இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் "இது இந்திய நிறம். வெளிநாட்டவர்களிடம் சென்று அவர்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறார்கள் என்று கேட்க முடியாது. நமக்கும் வெள்ளை நிறமே வேண்டும் என்று நினைக்க முடியாது. அதுதான் அவர்களின் தோல் நிறம். இது நம்முடையது. ஆப்பிரிக்கர்களுக்கும் அவர்களின் சொந்த நிறம் இருக்கிறது. அவர்களும் அழகாகவே இருக்கிறார்கள்." என்று விளக்கம் அளித்தார்.


நன்மை செய்யும் உள்ளம் :

மேலும் சாய் பல்லவி கூறுகையில் "அப்படிப்பட்ட விளம்பரத்தில் கிடைக்கும் பணத்தை நான் என்ன செய்து விடமுடியும்? வீட்டிற்குச் சென்று மூன்று சப்பாத்தி அல்லது சாதம் சாப்பிட்டுவிட்டு, என் காரில் சுற்றி வருவேன். எனக்கு வேறு பெரிய தேவைகள் இல்லை. என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு நான் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சி அவசியம் என்று நினைக்கிறேன். நாம் தவறான கணிப்பில் உள்ளோம் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. உண்மையான அழகி தான் பல்லவி. அவரது சிரிப்பையும் சேர்த்தே கூறலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!