தெலுங்கு நடிகை நிஹாரிகா கொனிடேலா விவகாரத்து அறிவிப்பு..!

தெலுங்கு நடிகை  நிஹாரிகா கொனிடேலா விவகாரத்து அறிவிப்பு..!
X
சினிமாவில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சைதன்யா ஜொன்னலகட்டாவை விவாகரத்து செய்வதாக நடிகை நிஹாரிகா கொனிடேலா அறிவித்துள்ளார். அந்த அறிக்கையின்படி, சைதன்யதான் முதலில் விவாகரத்து கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக, நடிகை நிஹாரிகா கொனிடேலா அவரது தொழிலதிபர் கணவரான சைதன்யா ஜொன்னலகட்டாவிடம் இருந்து விவாகரத்து பெறப்போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்தன. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நிஹாரிகா நேற்று (4ம் தேதி ) இன்ஸ்டாகிராமில் சைதன்யாவிடமிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.


அந்த அறிவிப்பின்படி, சைதன்யா ஒரு மாதத்திற்கு முன்பே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார் என்றும் தெரிகிறது. நிஹாரிகா மூத்த நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் மருமகள் மற்றும் நடிகர் ராம் சரணின் உறவினர் ஆவார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பகிரப்பட்ட அவரது அறிக்கையில், "சைதன்யாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், நாங்கள் பிரிந்தபின்னரும் அன்பு மற்றும் அனுசரணை உள்ளவர்களாக இருப்போம். ஆதரவின் தூண்களாக இருக்கும் எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இந்த பிரிவு என்பது எங்களது தனிப்பட்ட உரிமை. அதனால், இது எண்களின் தனி விஷயமாகவே பார்க்கப்படுவது சிறப்பாகும். புரிந்துகொண்டதற்கு நன்றி." என்று பதிவிட்டுள்ள அந்த பதிவுக்கான கருத்துகளை கூறுவதற்கு தடைபோடும்விதமாக Comment -ஐ அவர் மூடிவிட்டார்.

சைதன்யா முதலில் விவாகரத்து மனு தாக்கல்

நீதிமன்ற ஆவணங்களில், சைதன்யா முதலில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். சமர்ப்பித்ததாக கூறப்படும் ஆவணங்களில் மனுதாரர் என்று பெயரிடப்பட்ட சைதன்யா, ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்குள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், நிஹாரிகா கடந்த மாதம் தனது கணவர் சைதன்யா இல்லாமல் லாவண்யா திரிபாதியுடன் தனது சகோதரர் வருண் தேஜ் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். நிஹாரிகா மற்றும் சைதன்யா இருவரும் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை.

சமீபத்திய அறிக்கைகளின்படி, சைதன்யா நிஹாரிகாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டார். அவர் அவரை பின்தொடரவில்லை. சமீபத்தில் நிஹாரிகாவும் அவருடன் இருந்த உள்ள படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.


நிஹாரிகா மற்றும் சைதன்யா திருமணம்

அவர்களது திருமணம் 2020ம் ஆண்டு டிசம்பரில் உதய்பூரில் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்து சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனி விமானத்தில் பயணித்து நடனம் ஆடுவது முதல் பாட்டு கச்சேரியில் சிரஞ்சீவியின் முந்தைய ஹிட் பாடல்கள் என அந்த ஆண்டின் பிரபலங்களின் மிகப்பெரிய திருமணங்களில் இதுவும் ஒன்றாகும்.

இப்படி பெரிய வைபோகமாக நடந்த திருமணம், ஒரே விவாகரத்து என்ற சொல்லோடு முடிவடைந்து விடுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!