actor vivek unknown pages-'எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா' நடிகர் விவேக் தமாஷ் பேச்சு..! தெரியாத சில சம்பவங்கள்..!

actor vivek unknown pages-எனக்கு செலெக்டிவ்  அம்னீஷியா  நடிகர் விவேக் தமாஷ் பேச்சு..! தெரியாத சில சம்பவங்கள்..!
X

நடிகர் விவேக் (கோப்பு படம்)

actor vivek's unknown pages-நடிகர் விவேக் தொடர்புடைய பலரும் அறியாத சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

actor vivek's unknown pages-விவேக் நாம் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவர் திரையில் நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்தக் கருத்துகளை கொடுப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். அவரைப் பற்றி அதிகம் தெரியாதவை ஆனால் அரிதான சில விஷயங்களை இங்கு நாம் பார்ப்போம்.


விவேக் தெனாலியில் முதன்முறையாக கமலுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கமலுடன் என்பதால் விவேக்கும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். கமல் மற்றும் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்றும் படம் என்பதால் இந்த வாய்ப்பை பெரிய பாக்கியமாக கருதினார்.

ஆனால், அவருக்கான கதாபாத்திரத்திற்கான கதை அவருக்கு விளக்கப்பட்டபோது, பாத்திரத்தின் ​​மோசமான பகுதியை காரணம் காட்டி படத்திலிருந்து அவர் விலகினார். இது எனக்கான கதாபாத்திரம் கிடையாது என்று வெளிப்படையாக கூறினார். அவர் வெளியேறியதும், அந்த பாத்திரத்திற்கு மதன்பாப் சரியாக இருப்பார் என்று அவரே படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

actor vivek's unknown pages


தங்கர் பச்சான் தனது 'அழகி' படத்தை விநியோகஸ்தர்கள் பார்த்துவிட்டு நகைச்சுவை காட்சிகள் இருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினர். தங்கர் பச்சான் அழகி படத்தை விவேக்கிடம் காட்டினார். விவேக் படத்தை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனார். அவர் அந்த படத்தை முழுவதுமாக நேசித்தார். இப்படி ஒரு படத்திற்கு காமெடி அவசியம் தானா என்று யோசித்தார். ஆனாலும் தங்கர்பச்சான் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாதி சம்பளத்தில் அந்த படத்தில் நடித்துக்கொடுத்தார். ஆனால் அது போன்ற ஒரு படத்திற்கு தேவையில்லாத காமெடி டிராக் என்பதை விவேக் நன்றாக உணர்ந்திருந்தார்.

இருப்பினும் தங்கர்பச்சான் பின்னர்,' இப்போல்லாம் இந்த நகைச்சுவை நடிகர்கள் சினிமா வணிகத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர்' என்று விவேக் பற்றி புலம்பினார். விவேக் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு கடுமையான வார்த்தைகளுடன் ஒரு திறந்த கடிதம் அனுப்பினார். பின்னர் அது சமாதானத்துக்கு வந்தது.

actor vivek's unknown pages

சர்ச்சையான 'நெஞ்சில் குடியிருக்கும்' பாடல்

'நெஞ்சில் குடியிருக்கும்' பாடலைக் குறிப்பிடும் போது விவேக் சர்ச்சைக்குள்ளானார். பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், விவேக் நெஞ்சில் குடியிருக்கும் என்ற சொற்றொடர் ஏற்கனவே பழைய பாடல், அதனால் இது அதிக பிரபலமடையவில்லை என்று கூறினார்.

அந்த வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ' இப்போது விஜய் இதைப் பயன்படுத்துவதால், இந்த சொற்றொடர் மக்களைச் சென்றடையும்' என்று அவர் விளக்கம் கூறினார். விஜய் ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து அவர் இப்படி ஒரு விளக்கம் அளித்தார்.


actor vivek's unknown pages

எனக்கு செலக்டிவ் அம்னீஷியா

கல்லூரிப் படிப்பை முடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு விவேக் கல்லூரி காலத்து மாணவனாக நடித்தார். அவ்வாறு அவர் மாணவனாக நடித்தது வேடிக்கையாக பேசப்பட்டது.அதற்கு விவேக், தற்போதைய ஹீரோக்களின் மகன்கள் மற்றும் மகள்கள் நடிக்க வந்த பிறகு தான் நான் கல்லூரி மாணவனாக நடிப்பதை நிறுத்துவேன் என்று விவேக் ஒருமுறை அவரும் வேடிக்கையாகக் கூறினார்.

90ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல படங்களில் கல்லூரி வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார். பின்னர் ஒருமுறை நேர்காணலில் அவர் வேடிக்கையாக கூறியதை நினைவுப்படுத்தியபோது, அதே நேர்காணலில், 'செலக்டிவ் அம்னீஷியா' காரணமாக நான் பிறந்த ஆண்டை மறந்துவிட்டேன். அதனால்தான் இன்னும் கல்லூரி மாணவனாக, நடித்து வருகிறேன்' என்று அவர் கூறி சமாளித்த விதம் உண்மையாகவே நகைச்சுவையாகவே இருந்தது. அந்த பதிலால் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!