நடிகர் விக்ரமின் நிறைவேறாத சிறுவயது ஆசைகள் என்னென்ன?

நடிகர் விக்ரமின் நிறைவேறாத சிறுவயது ஆசைகள் என்னென்ன?
X
தன் சிறு வயது நிறைவேறாத ஆசையை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது

தமிழ் சினிமாவில் தன் அசாத்திய நடிப்பால், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விக்ரம். தனது கதாபாத்திரத்திற்காக எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்க தயங்காதவர் விக்ரம்.

விக்ரமின் கோப்ரா திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து மணிரத்தனத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார் விக்ரம். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

விக்ரமின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இப்படங்கள் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையுடன் இருக்கின்றார் விக்ரம்.

இந்நிலையில் விக்ரம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது தன் சிறுவயது ஆசைகள் பற்றியும் பள்ளி மதிப்பெண்கள் பற்றியும் கூறினார். அவர் கூறியதாவது, நான் பள்ளி படிக்கும்போது என் பெற்றோருக்கு நான் டாக்டர் ஆகவேண்டும் என்றுதான் விருப்பம்.


எனக்கும் நன்றாக படித்து டாக்டர் ஆகவேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் என் பிளஸ் 2 மார்க் குறைந்ததால் எனக்குமருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. சரி, பல் மருத்துவமாவது படிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். அந்த படிப்பிறகும் என் மதிப்பெண் போதவில்லை.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆகலாம் என நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை என்றார் விக்ரம்.

இவ்வாறு தன் சிறு வயது நிறைவேறாத ஆசையை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது

Tags

Next Story
ai in future agriculture