நடிகர் விஜய் என்னோட பெரிய கிரஷ்: ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் என்னோட பெரிய கிரஷ்: ராஷ்மிகா மந்தனா
X
கில்லி படத்தை 20 முறைக்கு மேல் நான் பார்த்துள்ளேன். அவர் தான் என்னோட பெரிய கிரஷ் என்று ராஷ்மிகா மந்தனா கூறினார்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரமும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா டிச.24 சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா, விஜய்யை புகழ்ந்து பேசினார், மேலும் அவர் தன்னை சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று மதிப்பிட்டார்.

நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை நான். அவர் நடிப்பில் வெளியான கில்லி படத்தை முதல் நாள் முதல் ஷோ எங்க அப்பாவோட பார்த்தேன்.. அவருடன் நடிக்கணும் என்கிற எனது நெடுநாள் ஆசை இந்த படத்தை அவருக்காக மட்டும் தான் ஓகே சொன்னேன். கில்லி படத்தை 20 முறைக்கு மேல் நான் பார்த்துள்ளேன். அவர் தான் என்னோட பெரிய கிரஷ் என நடிகை ராஷ்மிகா மந்தனா பேசினார்

பின்னர் மேடையில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார்

Tags

Next Story
ai in future agriculture