நான் போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன்: நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்
சிவகார்த்திகேயன்
சென்னை எழும்பூர் போலீஸ் மியூசியத்தை,நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் சிவகார்த்திகேயன் கூறியதாவது: 'போலீஸ் மியூசியம்' என்றால் அதில் என்ன இருக்கும்? எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாக இருந்தது. நான் காக்கிச் சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார்.
அதனால், போலீஸ் மீது எனக்கு எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு. நம்மூரில், போலீஸ் துறை ஆரம்பத்தில் இருந்து, அதன் பரிமாணம் எப்படி வளர்ந்தது என்பதை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதிலும், அதை விளக்கியது அருமை. தெரிந்த விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னும் ஒரு கதை உண்டு. போலீசாக நினைப்பவர்கள், போலீசால் கவரப்பட்டவர்கள் அனைவரும், இந்த மீயூசியத்தை காண வேண்டும்.
அதுமட்டுமின்றி, போலீசாக எப்படியெல்லாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறியலாம். காவல்துறை மற்றும் சிறைத்துறை பற்றி, இங்கு அருமையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவிலே சிறந்த இடம் என்பதை, இதை பார்த்தபோது புரிந்தது. குழந்தைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்தார். உடன், உதவி கமிஷனர் ஹரிகுமார் இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu