நான்காண்டுகளுக்கு பிறகு இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

நான்காண்டுகளுக்கு பிறகு இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
X

இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த்

ஜெயிலர் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் இன்று இமயமலை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்திற்கு சினிமாவை தாண்டி ஆன்மிகம் மேல் அளவுக்கடந்த நம்பிக்கை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தனது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இமயமலை செல்வது ரஜினியின் வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார். இதனிடையே, ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் அங்கிருந்து இமயமலை செல்கிறார். இமயமலை செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்' என்றார்.

ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், படத்தை பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள்' என்றார்.

திட்டமிட்டபடி இன்று ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ஒரு வாரம் இருப்பார் எனவும், அங்குள்ள புனித தலங்களுக்கு செல்வார் எனவும் கூறப்படுகிறது. எப்போது தன்னுடன் மகள்களில் ஒருவரை உடன் அழைத்து செல்லும் ரஜினி இம்முறை தனியாக செல்வதாக சொல்லப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!