மீண்டும் 'அண்ணாத்தே' கெத்து காட்ட ஹைதராபாத்துக்கு புறப்பட்டார்

மீண்டும் அண்ணாத்தே கெத்து காட்ட ஹைதராபாத்துக்கு புறப்பட்டார்
X
'அண்ணாத்தே' படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் சூட்டிங் நடக்காமல் தடைபட்டுக் கிடந்தது. இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டு ரஜினி தனது உடல் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்திருந்தன.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்தே' படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். குறிப்பாக விஐபிக்கள் புறப்படும் ஆறாம் நம்பர் கேட்டிலிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்தே படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு குவில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சூட்டிங் றது செய்யப்பட்டது. அந்த சூட்டிங் வெறும் 16 நாள் மட்டுமே நடந்தது. கொரோனா அச்சத்தில் ரஜினி சூட்டிங்கில் இருந்து திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும், சூட்டிங் தொடங்க உள்ளதால் இன்று காலை ரஜினி ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!