அனுஷ்காவையும் காதலிக்கலை..! அம்மாவின் ஆசையையும் நிறைவேத்தலை,பிரபாஸ்..!

அனுஷ்காவையும் காதலிக்கலை..! அம்மாவின் ஆசையையும் நிறைவேத்தலை,பிரபாஸ்..!
X

பிரபாஸ்-அனுஷ்கா 

கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தனது அம்மாவின் ஆசையை இன்னும் பூர்த்தி செய்யாமல் நடிகர் பிரபாஸ் தவிர்த்து வருகிறார்.

நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் ஒரே இரவில் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்றார். இன்றும் அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பெண்கள் பிரபாஸை காதலித்து வருகின்றனர். இவரின் பிரபலத்தைப் பார்த்து, மகிழ்ந்த அவரது அம்மா எப்போது தனது மருமகளை வீட்டிற்கு அழைத்து வருவார் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். இப்போதும் பிரபாஸின் அம்மா அதே கனவில் இருக்கிறார்.

அம்மா சிவகுமாரியுடன் பிரபாஸ்

இதை பிரபாஸே தனது பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். திருமணத்துக்காக தனது அம்மா தன்னிடம் பல நாட்கள், பல முறை பேசியதை பிரபாஸ் கூறியுள்ளார். ஆனால், பாகுபலி படத்திற்கு முன்னிருந்தே அம்மாவின் திருமண ஆசையை தவிர்த்து வருகிறார். பாகுபலி வெளியான பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஒருமுறை அவரது அம்மாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பிரபாஸ் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால், அவரது அம்மா மிகுந்த மன வேதனையில் இருப்பதாக அவரது குடும்ப உறவுகள் கூறிவருகின்றனர்.

பாகுபலி பட ஷூட்டிங்கில்.

பிரபாஸின் பெயர் பல பாலிவுட் நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டது. சில சமயம் நடிகை நிஹாரிகாவுடனும், சில சமயம் நடிகை அனுஷ்கா ஷெட்டியுடனும் 'காதல்' என்ற செய்தி பாலிவுட்டில் பரவியது. ஆனால், பிரபாஸ் தனது உறவைப் பற்றி வெளிப்படையாக பேசவில்லை. தனது தாயார் சிவகுமாரியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதனால் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பிரபாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இனிமேலாவது அவரது அம்மா ஆசையை நிறைவேற்றுவாரா?

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!