கமலின் அடுத்த பட அப்டேட்..!

கமலின் அடுத்த பட அப்டேட்..!
X

கமலின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் மகேஷ் நாராயணன், (அடுத்த படம்) நடிகர் கமல்ஹாசன்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நான்காண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றிய நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைக்கு வந்தநாள் முதல் உலகெங்கும் கொண்டாட்ட படமாக உற்சாக ஓட்டத்தில் இருக்கிறது.

இந்நிலையிலேயே நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அப்டேட் செய்துள்ளார். 'விக்ரம்' படக்குழுவே மீண்டும் இணைகிறது என்றாலும், படத்தை இயக்கப்போவ்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அல்ல என்பதுதான் அதிர்ச்சி தகவல். மாறாக, கமலின் அடுத்த படத்தை இயக்கப் போகிறவர் மகேஷ் நாராயணன்.

யார் இந்த மகேஷ் நாராயணன்?

மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலை வைத்து 'டேக் ஆஃப்', 'சி யூ சூன்', 'மாலிக்' ஆகிய படங்களை இயக்கியவர்தான் இந்த மகேஷ் நாராயணன். இவருக்கு சிறந்த எடிட்டர் என்கிற இன்னொரு முகமும் உண்டு.

கமலின் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இவர்தான் எடிட்டர். கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இவரும் ஒருவர் என்பது தான் கூடுதல் தகவல்.மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மீண்டும் கமலுடன் இப்படத்தில் இணையலாம் என்கிறார்கள் படக்குழுவினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!