நடிகர் கௌதம் கார்த்திக்- மஞ்சுமா நவம்பர் 28 இல் திருமணம்.. சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு

நடிகர் கௌதம் கார்த்திக்- நடிகை மஞ்சுமா திருமணம் சென்னையில் நவம்பர் 28 ஆம் தேதி எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நடிகர் கௌதம் கார்த்திக்- மஞ்சுமா நவம்பர் 28 இல் திருமணம்.. சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு
X

நடிகர் கௌதம் கார்த்திக்- நடிகை மஞ்சுமா.

நவரச நாயகன் கார்த்திக் - நடிகை ராகினி தம்பதியின் மகன் கௌதம் கார்த்திக். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து, இந்திரஜித், ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகர் பார்த்திபனுடன் இணைந்து யுத்தம் செய், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன், ஹர ஹர மகாதேவி, மிஸ்டர் சந்திரமௌலி, வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களிலும் கௌதம் கார்த்திக் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் தேதி கௌதம் கார்த்திக் நடித்து வெளியான தேவராட்டம் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் கௌதம் கார்த்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுமா மோகன் நடித்து இருந்தார். பார்ப்பதற்கு தமிழ் பெண் போல இருக்கிறார் என மஞ்சுமாவுக்கு அந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.


மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மஞ்சுமா மோகன் ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் மஞ்சுமா மோகன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

பின்னர், தேவராட்டம் படத்தல் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது கௌதம் கார்த்திக்கும், மஞ்சுமாவும் நெருங்கி பழகினர். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது. இருப்பினும், இருவர்களும் நண்பர்களாகவே பழகுகிறோம் என தெரிவித்தனர். பின்னர், காதலில் விழுந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சுமாவும் இணைந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

பெரியோர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆசியோடு எங்கள் இருவருக்கும் சென்னையில் நவம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமணம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சிறிய குடும்ப நிகழ்வாக திருமணம் நடைபெறுகிறது.

தேவராட்டம் படத்தில் நடித்தபோது நண்பர்களாகவே பழகினோம். அதன் பிறகு ஓராண்டு கழித்து காதல் மலர்ந்தது. அனைவரது ஆசியோடும் தற்போது திருமணம் நடைபெற உள்ளது என இருவரும் தெரிவித்தனர். பின்னர், கௌதம் கார்த்திக்- மஞ்சுமா இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

பேட்டியின்போது, நடிகர் கௌதம் கார்த்திக் கூறியதாவது:

மஞ்சுமாவிடம் முதலில் நான் தான் காதலை சொன்னேன். அவர் இரண்டு நாட்களில் பதில் கூறுவதாக தெரிவித்தார். அந்த இரண்டு நாட்களும் எனக்கு பதட்டமாக இருந்தது. பின்னர், அவர் எனது காதலை ஏற்றுக் கொண்டார். தனிப்பட்ட வாழ்வில் மஞ்சுமா மிகவும் தைரியமானவர்.

தற்போது 1947 மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். திருமணத்திற்கு பிறகு மஞ்சுமா நடிப்பாரா என்பதை இப்போது கூற முடியாது. இருவரது பெற்றோர் ஆசியுடன் தான் இந்தத் திருமணம் நடைபெறுகிறது என கௌதம் கார்த்திக் தெரிவித்தார்.

Updated On: 23 Nov 2022 5:40 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
  2. தமிழ்நாடு
    கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
  3. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  4. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  5. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  6. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  7. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  8. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  10. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!