நடிகர் தனுஷ் நோட்டீஸ் : மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு..!

நடிகர் தனுஷ் நோட்டீஸ் : மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு..!
X

நடிகர் தனுஷ், உரிமை கோரும் தம்பதி.

நடிகர் தனுஷ் எங்களது சொந்த மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனுஷ்,தங்களது மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தனது புகழுக்கும்,பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் மகன் என்று உரிமை கோரி நற்பெயரை இழந்ததற்காக உங்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் நடிகர் தனுஷ் தங்களது சொந்த மகன் என்று கூறி தனுஷ் மீது உரிமை கோரியிருந்தனர். அவ்வாறு அந்த தம்பதி உரிமை கோரியதால் நடிகர் தனுஷ் மற்றும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஆகியோர் தனுஷ் குறித்து 'விசேஷமான' உரிமைக்கோருவதை நிறுத்தவேண்டும் என்று அந்த தம்பதிக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

என் மீது தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில்,எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்படி உங்கள் மீது வழக்கு தொடர நீதிமன்றங்களை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக உங்கள் இருவர் மீதும் வழக்கு தொடரப்படும்' என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, மகன் என்று உரிமை கோருவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai future project