/* */

துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த சமுத்திரக்கனி..

நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி.

HIGHLIGHTS

துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த சமுத்திரக்கனி..
X

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இயக்குநர் வினோத்துடன் காவல் அதிகாரி வேடத்தில் சமுத்திரக்கனி.

2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னணி நடிகர்களான அஜித்குமார் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படங்கள் வெளியாகிறது என்பதால் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர் தமிழ் திரைப்பட ரசிகர்கள். விஜய் நடித்த வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. பாடல் வெளியாகி இணையதளத்தில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதேபோல, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்திற்கும், அதன் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்-வினோத் கூட்டணி துணிவு படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.


இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா... என்ற பாடல் வரிகளை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். அந்த பாடலை அனிருத் பாடியிருப்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. வைசாக் என்பவர் இந்த பாடலை எழுதி உள்ளார்.

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா.. பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீசர், டிரைலர் என்று இல்லாமல் இரண்டு நிமிடம் ஓடக்கூடிய சில காட்சிகளை வெளியிடவும் படக்குழு தயாராகி வருகிறது.

போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள துணிவு படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. அஜித்குமார் கொள்ளை கும்பல் தலைவனாக நடித்து உள்ளார். காவல் துறை அதிகாரியாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அஜித் டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ள நிலையில், தற்போது மஞ்சு வாரியார் டப்பிங் பேசி வருகிறார்.

துணிவு படம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில், துணிவு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்களை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் பகிர்ந்து உள்ளார். மிடுக்கான காவல் துறை அதிகாரி வேடத்தில் இருக்கும் சமுத்திரக்கனி துணிவு திரைப்படத்தில் இயக்குநர் வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோருடன் இணைந்து எடுத்த படங்களை சமுத்திரக்கனி பகிர்ந்து உள்ளார்.

இதேபோல, நடிகை மஞ்சு வாரியாரும் துணிவு படத்திற்கான டப்பிங் பேசுவது போன்ற படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த படங்களை பார்த்து அஜித் ரசிகர்கள் வரவேற்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Updated On: 26 Nov 2022 2:33 PM GMT

Related News