அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவர்கள் தானாம்

அஜித்தின்  அடுத்த படத்தை இயக்க போவது இவர்கள் தானாம்
X

புஷ்கர் காயத்ரி - அஜித்

நடிகர் அஜித்குமாரின் AK63 படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் விரைவில் அவரின் 61-வது திரைப்படமான AK61-ல் இணையவுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே அவரின் AK61 திரைப்படம் முடியும் முன்பே அவரின் 62-வது திரைப்படம் குறித்த வெளியாகி இருந்தது. அதன்படி அப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.

மேலும் தற்போது விக்னேஷ் சிவனிற்கு அடுத்து அஜித் திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது.


ஆம், இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தான் அஜித்தின் அடுத்த படத்திற்காக கதை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய தம்பதிகள் புஷ்கர் மற்றும் காயத்ரி. இந்த தம்பதிகள் தற்போது 'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகின்றனர்

விக்ரம் வேதா என்ற மெகாஹிட் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி சமீபத்தில் சூழல் என்ற தொடரை இயக்கியிருந்தனர். மேலும் விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கும் விரைவில் வெளியாக இருக்கிறது. சூழல் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இவர்கள் இருவரும் அஜித்தை இயக்கபோவதாக தகவல்கள் வந்துள்ளது.

இதற்கிடையே தங்களின் அடுத்த திரைப்படத்தில் அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் நடிகர் அஜித்தின் திரைப்படத்திற்கு கதை எழுதி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!