நடிகர் அஜித் குமார் பட நாயகி பார்வதி நாயர் வீட்டில் திருட்டு..!

நடிகர் அஜித் குமார் பட நாயகி பார்வதி நாயர் வீட்டில் திருட்டு..!
X

நடிகர் அஜித்குமார், நடிகை பார்வதி நாயர்

Parvathy Nair Actress -'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடித்த பார்வதிநாயரின் வீட்டில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடுபோயின.

Parvathy Nair Actress -நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து வெளியான படம் 'என்னை அறிந்தால்'. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்த நாயகி நடிகை பார்வதி நாயர். இப்படத்தில் அவர், எலிசபெத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம்தான் நடிகை பார்வதி நாயர் தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.

அஜித் குமாரின் 'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு, 'உத்தம வில்லன், 'மாலை நேரத்து மயக்கம்', 'கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் நடித்தார். துபாயில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்த மென்பொறியாளரான பார்வதி நாயர் அதிகமாக மலையாளப் படங்களில்தான் நடித்து வருகிறார். இவர் நடித்து வருகின்ற இரண்டு படங்கள் தற்போது படப்பிடிப்பில் உள்ளன.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை பார்வதி நாயர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நிறைய வேலைக்காரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நடிகை பார்வதி நாயர், படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விடுவார். அவர் வரும்வரை வீட்டில் வேலைக்காரர்கள் மட்டுமே இருப்பர். அந்த வேலைக்காரர்களேதான் வீட்டைப் பார்த்துக்கொள்வார்கள்.

அப்படித்தான் அண்மையில், நடிகை பார்வதி நாயர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டு, கடந்த அக்டோபர் 18-ம் தேதிக்கு முன்தினம் பகல் பொழுதில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது இவர் வீட்டில் வைத்திருந்த ஐபோன், விலையுயர்ந்த சோனி கேமரா, விலை உயர்ந்த மேக்ஸ் லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி நாயர், வீட்டில் வேலை செய்யும் மேனேஜர் பிரசாத் ஹவுஸ் கீப்பிங் இளங்கோவன் சமையலரான சாந்தி மற்றும் உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை அழைத்து காணாமல் போன பொருட்கள் பற்றி கேட்டுள்ளார்.

பார்வதி நாயரின் கேள்விக்கு, அவர்கள் கூறிய பதில்களும் தகவல்களும் திருப்தி அளிக்காததால் இரண்டு நாளைக்கு முன்பு அவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பார்வதி நாயர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் அவரது வீட்டில் வேலை செய்யும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். சுபாஷ் சந்திரபோஸ் கடந்த இரண்டு வருடமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பார்வதியின் நாயர் வீட்டில் வேலை செய்வதாகவும் மற்ற நாட்கள் அண்ணா நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ராஜேஷ் என்பவரின் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸ் தவிர, வீட்டில் வேலை செய்யும் மற்ற வேலைக்காரர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சுபாஷ் சந்திரபோஸ் கூறிய பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர். போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என தெரியவருகிறது.

வேலைக்காரர்களை நம்பி வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றநிலையில், இப்படி விலையுயர்ந்த பொருட்கள் பறிபோனதே என்று மிகவும் அப்செட்டில் உள்ள நடிகை பார்வதி நாயர் டென்ஷன் குறையாமல் உள்ளார். இதனால், அவர் நடித்து வரும் படங்களின் படக்குழுவினரும் அப்செட்டில் உள்ளனராம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது