கரகாட்டக்காரனுக்கு முப்பத்தைந்து வயது..!
இசையமைப்பாளர் இளையராஜா
கரகாட்டக்காரன் படத்தின் முந்தி முந்தி விநாயகனே, பாட்டாலே புத்தி சொன்னான், மாரியம்மா, மாரியம்மா, ஊரு விட்டு வந்து ஊரு வந்து,, இந்த மான் எந்த மான், மாங்குயிலே பூங்குயிலே, குடகுமாலை காற்றில் வரும்...இந்த பாடல்களுக்கு வயது இன்றுடன் வயது 35.
1989ம் ஆண்டு ரீலிசானது கரகாட்டக்காரன். படத்தின் வெற்றி பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை. தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் சென்டர் இந்த படம். கரகாட்டகாரன் படம் ரிலீசுக்கு, சரியாக ஒரு மாதம் முன்பாக, பாடல் கேசட்டுகள் வெளியாகின. கேசட் விற்பனையான வேகத்தை பார்த்து, கடைக்காரர்களே தலைசுற்றி விழுந்தனர். அனைத்து ஊர்களிலும் ஹிட் அடித்தது.
மூன்று வாரம் ஓடினாலே வெற்றி என கொண்டாடும் இந்த சூழலில் 365 நாள் ஓடிய படம் கரகாட்டக்காரன். மாங்குயிலே, பூங்குயிலே பாடல் பெப் கொடுத்து பீட் ஏற்றியது என்றால், குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா.. பாடல், இன்றளவுக்கும், பிரிவுத்துயரை அனுபவிக்கும் காதலர்களுக்கு வடிகாலாக உள்ளது.
ஊரு விட்டு ஊரு வந்து பாடல் இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடும் பாடல்.. சாமத்தில வாரேன் சாமந்திபூ தாரேன் என ராமராஜன் கனகாவை பார்த்து பாடுவதை ரசிக்காதவர் எவரும் இல்லை. ஆடுவோர் ஆபாசமாக பார்க்கப்பட்ட காலத்தில், அதை நமது பாரம்பரிய கலையாக முன்னிறுத்தி, அக்கலைஞர்களுக்கு பெரும் கவுரவத்தை கொண்டு வந்து கொடுத்தது, கரகாட்டக்காரன்.
இந்த படத்தின் அத்தனை பாடல்களுக்கும் இளையராஜா இசையமைக்க எடுத்து கொண்ட நேரம் என்ன தெரியுமா ..? வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே. இந்த கரகாட்டகாரன் வந்த 1989 ஆம் ஆண்டு இளையராஜா இசையமைத்த படங்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா.? கரகாட்டகாரன் உட்பட 32 படங்கள். இந்த ஒரே வருடத்தில் பாடல்கள் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் கீழே....ராஜாதி ராஜா, சிவா, சின்னப்பதாஸ், அபூர்வ சகோதரர்கள், இதயத்தை திருடாதே, வருஷம் 16, வாத்தியார் வீட்டுப் பிள்ளை, வெற்றி விழா, தங்கமான ராசா,பாட்டுக்கு ஒரு தலைவன், பாண்டி நாட்டுத் தங்கம், புதுப்புது அர்த்தங்கள், பொன்மன செல்வன், கரகாட்டக்காரன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், என்னெப்பெத்த ராசா, மாப்பிள்ளை.. அத்தனை படங்களும் மியூசிக்கல் ஹிட். இத்தனை படங்கள் அதிலும் மொத்த பாடல்களும் அதிரடி ஹிட்.
இப்ப இல்ல எப்பவுமே எவரும் கற்பனை கூட பண்ண முடியாது.. ஒரே வருடத்தில் இத்தனை பாடல்களை சூப்பர் ஹிட்டாக்க.. இப்போ தெரிகிறதா ஏன் அவரை இசைக்கடவுள் என சொல்கின்றோம் என...!!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu