/* */

'எலக்ட்ரிக் காரோடு விளையாடுங்க' மாச்பாக்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி

குழந்தைகள் மத்தியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் மேட்ச்பாக்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது.

HIGHLIGHTS

எலக்ட்ரிக் காரோடு விளையாடுங்க   மாச்பாக்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி
X

குழந்தைகள் விளையாடும் கார்கள் (மாதிரி படம் )

குழந்தைகளை எலக்ட்ரிக் கார்களுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் மாச்பாக்ஸ் நிறுவனம்

விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் பொழுது போக்கு மட்டுமல்லாமல் அவர்களின் அறிவுக் கூர்மையை வளர்க்கவும், கல்வி மற்றும் நடைமுறை வாழ்க்கையை கற்றுக் கொள்ளவும் பயன்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் நவீன யுகத்திற்கேற்ப பல்வேறு பொம்மைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இன்று குழந்தைகளுக்கான பொம்மைகள் வர்த்தகம் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா காலத்தில் இந்த வர்த்தக சந்தை மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கான பிரத்தியேக கார்களை தயாரிக்கும் நிறுவனமான மாச்பாக்ஸ், மின் சக்தியில் இயங்கும் குழந்தைகளுக்கான கார்களை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் டெஸ்லா, ரோட்ஸ்டர் கார் மாடலை முதலில் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து, நிஸான்,டொயோட்டா,பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் கார் மாடல்களை அடுத்தப்படியாக தயாரிக்க உள்ளது.

மேலும் கார்களுகளை சார்ஜ் செய்வதற்கான மின்சார நிலையத்தையும், இந்த நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் நியுரியா அலன்சோ, கூறுகையில் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் கார் ஓட்டுநர்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் எண்ணத்தைக் குழந்தைகளிடம் ஊக்குவிக்க, இந்த முயற்சி பயன் படும் என்று நாங்கள் நம்புகிறோம். 99 சதவீதம் சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் இந்த கார்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் 70 வருடங்களாகக் குழந்தைகளுக்கான கார்களை தயாரித்து வருகிறது. வருடத்திற்கு 4 கோடி கார்களை இந்த நிறுவனம் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 April 2021 4:39 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  2. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  3. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  4. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  5. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  6. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  7. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  8. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  9. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  10. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு