செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி: அமுல் நிறுவனம் வழக்கு

செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி:   அமுல் நிறுவனம் வழக்கு
X

அமுல் நிறுவனத்தின் செறிவூட்டப்பட்ட பால் பொருள் 

செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பதை எதிர்த்து செறிவூட்டப்பட்ட பாலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பதை எதிர்த்து அமுல் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. தொடர்ந்து உள்ளது.

செறிவூட்டப்பட்ட பால் என்பது பால் கலந்த குளிர்பான வகையை சேர்ந்தது. எனவே இதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று குஜராத் ஆணையம் கூறியுள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிட்., பால் பொருட்களை அமுல் என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்து வருகிறது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிட்., அமுல் கூல் மற்றும் அமுல் கூல் கபே என்ற பெயரில் செறிவூட்டப்பட்ட பாலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தது.

இதில் செறிவூட்டப்பட்ட பால் என்பது புதிய பாலை பதப்படுத்தி அதில் கலந்துள்ள கொழுப்புகளை நீக்கி, பாலை காய வைத்து, வடிகட்டி பின்னர் காயவைத்து, குளிரவைத்து சர்க்கரை மற்றும் அதில் வேறுபட்ட சுவையூட்டிகள் சேர்த்து பாட்டிலில் பேக் செய்யப்படுகிறது.

அதனால் இந்த பாலில் கலந்துள்ள குளிர்பானங்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. எனவே இதற்கு 12 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூறியுள்ளது. இது சரியானதல்ல என்று அமுல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. உணவுப்பொருள் பிரிவிலேயே செறிவூட்டப்பட்ட பொருட்களை சேர்க்கவேண்டும். குளிர்பான பொருட்களில் சேர்க்க கூடாது என்று அமுல் நிறுவனம் கூறுகிறது. இதற்கு முன்னர் கர்நாடகாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் இது போன்ற செறிவூட்டப்பட்ட பாலுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்