போலீசாருக்கு வார விடுமுறை டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

போலீசாருக்கு வார விடுமுறை  டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு
X

டிஜிபி சைலேந்திர பாபு

தமிழக போலீசாருக்கு வார விடுமுறையுடன் திருமணம், பிறந்த நாளிலும் விடுமுறை அளிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கூடுதல் டிஜிபி, ஐஜி., மற்றும் டிஐஜிகளுக்கு அவர் இன்று அனுப்பிய சுற்றறிக்கை: போலீசார் தங்கள் உடல் நலனை பேணிக்காக்க ஏதுவாகவும்,

அவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கும் வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும்.

வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கும், ஓய்வு தினத்தில், பணியில் இருக்கும் போலீசாருக்கும், மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.

போலீசாரின் பிறந்த நாள், திருமண நாட்களில், அவர்களின் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ, அந்த இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும்.

தமிழக காவல் துறையின் சார்பில், போலீசாரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி, மாவட்ட மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தவறாமல் கட்டாயம் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!