/* */

கப்பலூரில் சுங்கசாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

மதுரை கப்பலூர் சுங்கசாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது.

HIGHLIGHTS

கப்பலூரில் சுங்கசாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
X

மதுரை கப்பலூர் சுங்கசாவடி ஊழியர்களிடம் மூன்று பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த காட்சி.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது., 2 துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல். CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் வந்த 3 பேர் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடம் கட்டணம் செலுத்த முடியாது என வாக்குவாதம் செய்ததுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் வந்த மூன்று பேர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சுங்கச் சாவடியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவர்களை பிடிக்க அனைத்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்., ஆனால் அவர்களே மீண்டும் திரும்பி வந்த போது போலீசார் அந்த சிகப்பு நிற மஹிந்திரா வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் பிடிபட்ட மூவரும் தென்காசி மாவட்டம் சுரண்டையை பகுதியை சேர்ந்த (1).ஜெயக்குமார், 2).முத்துக்குமார், 3).பொன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஏர் பிஸ்டல் மற்றும் ஏர்கன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு திருமங்கலம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 22 April 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்