தலைமை செயலர் டிஜிபி உட்பட 4 அதிகாரிகள் திடீர் டில்லி பயணம்

தலைமை செயலர் டிஜிபி உட்பட 4 அதிகாரிகள் திடீர் டில்லி பயணம்
X

தமிழக தலைமை செயலர் ராஜுவ் ரஞ்சன், உள்துறை செயலாளா் பிரபாகா், டிஜிபி திரிபாதி, உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகிய 4 போ் இன்று காலையில் டில்லி புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர இருக்கிறது. ஏா்இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டில்லிக்கு டிஜிபி மற்றும் உள்துறை இணை செயலாளா் 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

அதைப்போல் இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டில்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜுவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் ஆகிய இருவரும் டில்லி புறப்பட்டு சென்றனா்.தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளது பெரும் பரபரப்பாக உள்ளது. மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாக இவா்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!