/* */

தமிழக புது டி.ஜி.பி ஆக சைலேந்திர பாபு நியமனம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி ஆக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தமிழக புது டி.ஜி.பி ஆக சைலேந்திர பாபு நியமனம்
X

தமிழகத்தின் புதிய போலீஸ் டிஜிபியாக சைலேந்திரபாபுவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.

தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்த நிலையில் யூபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழகக் காவல்துறையில், சட்டம் -ஒழுங்கு, தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி முக்கியமானது. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என அழைக்கப்படுகிறார்கள்.

இந்தப் பதவிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரியை தமிழக அரசு நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யூபிஎஸ்சி) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். அப்படித் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் அந்த பதவியில் இருப்பார்.

தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறுவதால் தற்போதுள்ள டிஜிபிக்களில் தகுதியுள்ள 7 பேர் பட்டியல் யூபிஎஸ்சி பார்வைக்குச் சென்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் டில்லி சென்றனர்.

அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியலில் 7 அதிகாரிகள் பெயர் அனுப்பப்பட்டது. அதில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் அந்த பட்டியலில் இடம் பெற்றனர்.இன்நிலையலில் தமிழகத்திற்கு புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987 ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி, தற்போது ரயில்வே டிஜிபியாக பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம், ஒழுங்குப்பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவராவார். புதிய டிஜிபி நாளை பொறுப்பேற்க இருக்கிறார்.

Updated On: 1 July 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!