கம்பம்: சிறுமியை கொலை செய்த இளைஞர் கைது

கம்பம் அருகே வண்டிப்பெரியாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பம்: சிறுமியை கொலை செய்த இளைஞர் கைது
X

கம்பம் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் அர்ஜுன் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையிடைத்தனர்.

கம்பம் அருகே உள்ள கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் வண்டிப்பெரியார் ஊராட்சிக்குள்பட சுரக்குளம் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளிகள் கண்ணன்- பிரேமா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. மூத்த மகன் கபில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகின்றார் இரண்டாவது குழந்தை 6 வயது சிறுமி ஹரிஷ்கா. அங்குள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 30 -ஆம் தேதி பெற்றோர் தேயிலைத் தோட்ட கூலி வேலைக்கு சென்றிருந்தனர். கூலி தொழிலாளிகள் குடியிருப்புப் பகுதியில் வீட்டில் சிறுமியும் சகோதரனும் வீட்டி இருந்துள்ளனர் இந்நிலையில் தங்கையை வீட்டில் விட்டுவிட்டு சகோதரன் முடி வெட்டுவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டா்.

முடி வெட்டி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது தனது வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டபட்டு இருந்துள்ளது .உடனே தனது தங்கையை கனிஷ்கா என்று அழைத்துள்ளார். எந்தவித பதிலும் இல்லாததால் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தனது தங்கை வீட்டிக்கு முன்பு உள்ள அறையில் மேற்புறத்தில் கட்டப்பட்ட கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கபிலின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ஹரிஷ்கா தூக்கில் தொங்கிகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி சிறுமி இறந்து இருக்கலாம் சம்பவத்தை பார்த்தவர்கள் கருதினர். சம்பவ இடத்திற்கு வந்த வண்டிப்பெரியார் காவல்துறையினர் தூக்கில் தொங்கி கொண்டிருந்த சிறுமியின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டபோது பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யப்பட்டு சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது .

இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் காவல் துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கும் சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்தது தெரியவந்தது.

வண்டிப்பெரியார் காவல்துறையினர் சுரக்குளம் எஸ்டேட் பகுதியில் விசாரணை நடத்தினர்.அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அர்ஜுன்(22) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.சந்தேகமடைந்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்து, உடலை துாக்கில் தொங்க விட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் கைது செய்து அர்ஜுனை சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 July 2021 2:51 AM GMT

Related News

Latest News

 1. சிங்காநல்லூர்
  ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்...
 2. கலசப்பாக்கம்
  ஜவ்வாது மலையில் புதிய கட்டிடங்கள் திறப்பு
 3. நாமக்கல்
  நாமக்கல் பகுதியில் 5 வழித்தடங்களில் பஸ் வசதி; துவக்கி வைத்த அமைச்சர்
 4. கோவை மாநகர்
  மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சித்து வருகிறார் :...
 5. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 6. திருவண்ணாமலை
  நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
 7. தமிழ்நாடு
  98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! அமைச்சர் தகவல்
 8. திருவண்ணாமலை
  சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் சேர்ப்பு
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து...