பொம்மிடியில் பேருந்தை நிறுத்தி வாக்களித்த தனியாா் பஸ் ஒட்டுநர்

பொம்மிடியில் பேருந்தை நிறுத்தி வாக்களித்த தனியாா் பஸ் ஒட்டுநர்
X

வாக்களித்து விட்டு வெளியே வரும் டிரைவர் ஸ்ரீதர்.

பொம்மிடியில் தனியாா் பேருந்து ஒட்டுநர் ஒருவர் பஸ்ஸை நிறுத்தி வாக்களித்து சென்றார்.

தருமபுாி மாவட்டம், பொம்மிடி பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீதா். இவா் தனியாா் பேருந்தில் ஒட்டுநராக பணிபுாிந்து வருகிறாா். பாலக்கோடிலிருந்து சேலம் செல்லும் பேருந்தில் பணிபுாிந்து வரும் இவா், சேலத்தில் இருந்து பாலக்கோட்டிற்க்கு பொம்மிடி வழியாக செல்லும் போது, தன் வாக்களிக்க வேண்டிய வாக்குசாவடி அமைந்துள்ள பள்ளி அருகே பேருந்தை நிறுத்தினார். பயணிகளிடம் தனது ஜனநாயக கடமையாற்ற 10 நிமிடம் அனுமதி அளிக்க வேண்டி கோாிக்கை விடுத்துள்ளாா்.

பயணிகளும் 10 நிமிடம் காத்திருக்க சம்மதம் தொிவித்ததால், ஒட்டுநர் ஸ்ரீதா் பொம்மிடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்து மகிழ்ச்சியுடன் பேருந்தை இயக்கினாா். தனக்கு வாக்களிக்க அனுமதியளித்த பயணிகளுக்கும் நன்றி தொிவித்தாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!