தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுடன்  கல்வி அமைச்சர் இன்று ஆலோசனை
X

பள்ளி வகுப்பறையில்   கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் (பைல் படம்)

செப்டம்பர் 1 -ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று ஆலோசனை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்தும், பள்ளி கல்வி அதிகாரிகளுடன், அமைச்சர் மகேஷ் இன்று சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும், அனைத்து வகை வகுப்புகளையும், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியுள்ளது. அதனால், செப். 1 -ஆம் தேதி பள்ளிகளை திறந்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், சில மாவட்ட கல்வி அலுவலர்களும், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்க உள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence