துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி
X
துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி.

திருச்சிமாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில் இன்று திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இந்திராகாந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!