நேருவை தகுதி நீக்கம் செய்ய புகார் அளித்த அதிமுக வேட்பாளர்
காவல்துறைக்கு கவர் கொடுத்த விவகாரத்தில் திமுக வேட்பாளர் கே.என். நேருவை கைது செய்து, தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி டிஆர்ஓ விடம் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் புகார் செய்துள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை அறிந்த தேர்தல் ஆணையம், அதிரடி சோதனை செய்து பண கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நேரடியாக ஒவ்வொரு காவலர்களின் விபரங்களுடன் தேர்தலுக்கு பண கவர் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் காவல்துறையினருக்கு திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக தகவல் வெளியாகியதாக தெரிகிறது. திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய்த கவருடன் விசாரணை நடத்தி வருகின்றார்.திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பண கவர் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை காவல் நிலையம் மற்றும் தில்லை நகர் காவல் நிலையத்தில் உள்ள இரண்டு எழுத்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற காவல் நிலையங்களல் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் 6 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி அதிமுக மேற்கு தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் பத்மநாபன் காவல்துறைக்கு கவர் கொடுத்த விவகாரத்தில் திமுக வேட்பாளர் கே.என். நேருவை கைது செய்து, தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி டிஆர்ஓ விடம் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் புகார் அளித்தார். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டனக் குரல்களை எழுப்பியும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தால் நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu