திருமங்கலம் அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு: 10 பேர் படுகாயம்

திருமங்கலம் அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் சாவு: 10 பேர் படுகாயம்
X

பைல் படம்.

திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடியாடியதில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த செங்குளம் கிராமத்தில் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டுள்ளனர்.

அப்போது சிறுவர்கள் கல்லெடுத்து தேன்கூட்டின் மீது ஏறி விளையாடிய நிலையில் தேனீக்கள் பறந்து அருகில் இருந்தவர்கள் மீது தன்னுடைய கோபத்தை காட்டும் வகையில் ராஜா தேனீக்கள் கொட்டியுள்ளது.

இதில் முத்து என்ற முதியவர் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் முத்து கொடிய் விசமுள்ள் ராஜா தேனீ கொட்டியதால் பலியானார். மேலும் 3 பெண்கள் உட்பட பத்து பேர் படுகாயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் போலீசார் முத்தவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்