8ம் தேதி முதல் பிளஸ்2-க்கு மீண்டும் நேரடி வகுப்பு : தமிழக அரசு

8ம் தேதி முதல் பிளஸ்2-க்கு  மீண்டும் நேரடி வகுப்பு : தமிழக அரசு
X
பிளஸ் 2 வகுப்புகளுக்கு மீண்டு நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த மீண்டும் பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2வகுப்புக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் (7ம் தேதி )வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் 8ம் தேதி முதல், பிளஸ் 2மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு இரண்டாவது ரிவிஸன் தேர்வு நடத்தவும், பிராக்டிகல் தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!