புனேவில் இருந்து 1,லட்சத்து 8000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தது

புனேவில் இருந்து 1,லட்சத்து 8000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தது
X

புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த கொரோனா தடுப்பூசி

புனேவில் இருந்து ஒரு லட்சத்து 8000 ஆயிரம் டோஸ் கோவிஷீலட்டு மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா பரவல் தொடர்ந்து கட்டுக்குள் உள்ளன.இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது.

இந்நிலையில் மத்திய தொகுப்பிற்க்கு புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 9 பார்சல்களில் 1 லட்சத்து 8 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த தடுப்பூசி மருந்துகளை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story