சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாமதமாக புறப்பட்ட விமானங்கள்

சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாமதமாக புறப்பட்ட விமானங்கள்
X
சென்னை சர்வதேச விமான நிலையம் (கோப்பு காட்சி)
சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் சர்வதேச விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகளில் பாதுப்பு எதுவும் இல்லை.ஆனால் சா்வதேச விமான சேவைகளில் புறப்பாடு விமானங்கள் தாமதமாகியுள்ளன.

சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்களில் பயணிகளின் உடமைகள் மற்றும் விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் போன்றவைகளை விமானங்களில் ஏற்றும் பணிகள்,தொடா் மழை காரணமாக தாமதமாகியுள்ளன.இதனால் விமானங்கள் புறப்படுவதும் தாமதமாகின்றன.

சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் தாய் ஏா்வேஸ் விமானம் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட வேண்டியது,அதிகாலை 3.19 மணிக்கும்,குவைத்திற்கு அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட வேண்டிய குவைத் ஏா்லைன்ஸ் விமானம் அதிகாலை 3.58 மணிக்கும், சாா்ஜாவிற்கு அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அதிகாலை 3.56 மணிக்கும்,சாா்ஜாவிற்கு அதிகாலை 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஏா் அரேபியா விமானம் காலை 6.11 மணிக்கும்,லண்டனுக்கு காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய பிரிட்டீஷ் ஏா்லைன்ஸ் விமானம் காலை 8.16 மணிக்கும், அபுதாபிக்கு காலை 8.25 மணிக்கு புறப்பட வேண்டிய எத்தியாடு ஏா்லைன்ஸ் விமானம் காலை 9.26 மணிக்கும் புறப்பட்டு சென்றன.இந்த 6 விமானங்களும் ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!