திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
X
திருச்சியில்உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக மாவட்ட வாரியாக கரோனா ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளார். இந்த வகையில் நேற்று சேலம், கோவை, ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் பின்னர் கார் மூலம் மதுரையில் இருந்து இன்று மதியம் 1.15 மணிக்கு திருச்சி வந்தார்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலின் ராஜீவ் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும், அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த ராஜீவ்காந்தி திருவுருவப் படத்திற்கும் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஸ்டாலின் ஓய்வெடுத்தார். இன்று மாலை திருச்சி கிஆபெ அரசு விசுவநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

தொடர்ந்து திருச்சி துவாக்குடி அருகே உள்ள என்.ஐடி.யில் கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதன் பின்னர் இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!