அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவன்  மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X
அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம், அருணா தம்பதியரின் மகன் ஏழுமலை (12). இவர், தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அரூர் வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் சிறுவன் ஏழுமலை வீட்டில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காலை 7 மணியளவில் வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த கம்பி மீது ஈரமான துணிகளை காயவைத்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஏழுமலை உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!