தர்மபுரி பகுதியில் பைக் திருடிய 4 பேர் சிக்கினர்

தர்மபுரி பகுதியில் பைக் திருடிய 4 பேர் சிக்கினர்
X
தர்மபுரி பகுதியில் பைக் திருடிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை மதிகோன் பாளையம் தர்மபுரி நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பும் பகல் நேரங்களில் கடைகளுக்கு முன்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் இருசக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதனையடுத்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் . இதனையடுத்து போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் அர்ஜுனன்(29),சிக்கபூவத்தி பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் சுந்தரமூர்த்தி(23), தர்மபுரி அடுத்த டீக்கடை குரும்பட்டி ராமசந்திரன் மகன் லோகேஷ் வரன்(19), தர்மபுரி குப்பா கவுண்டர் தெருவை சேர்ந்த பழனி மகன் சுரேந்தர்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 புல்லட் பைக், 3 பல்சர் பைக்குகள் ஒரு ஹோண்டா பைக் 2 ஸ்பிளென்டர் பைக் என 11 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பாராட்டினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!